இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே!

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

இலங்கையில் தனி ஈழத்திற்கான விடுதலைப் போரில்  ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில், ஒரு 142000 [ஒருலட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் பேர் ] பேர் பலியானதாக கருதப்படுகிறது. சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்சே, போரில் முக்கிய பங்கு வகித்தது மட்டுமல்லாமல் இனப்படுகொலைக்கு காரணகர்த்தாகவும் இருந்தார். தமிழர்கள் கொல்லப்பட்டதிலும், காணாமல் போனதிலும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராகி விட்டார். ஐ.நா. உயர் அதிகாரி ஹனாஸ் சிங்கர், இலங்கைக்கு வந்துள்ளார். அவர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தார். இருவரும் இலங்கையில் அமைதி, நல்லிணக்கம் நிலவச் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது, இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டனர் என்றும் அவர்கள் காணாமல் போனதற்கு விடுதலை புலிகளை காரணம் காட்டி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

ஆனால், காணாமல் போனவர்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்பது தெரியாததால், ‘காணாமல் போனார்கள்’ என்றே கூறி வருகிறார்கள்.என்றும் தேவையான விசாரணை முடிந்த பிறகு, காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ் வழங்கப்படும். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையை தொடர தேவையான உதவிகள் வழங்கப்படும்.

என்று கோத்தபய ராஜபக்சே கூறியதாக, அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் அரசியல்வாதிகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தில் காணாமல் போனோர் இறந்து விட்டதாக கூறும் விடயத்தில் அடிப்படை காரணங்கள் எவை என்பதை ஜனாதிபதி விளக்க வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்து இருக்கிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top