குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட களத்தில் பிரதமர் மோடியின் மனைவி?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட களத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி கலந்து கொண்டதாக தகவல் வைரலாகியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படத்தில் பெண்கள் அணி திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.

டிசம்பர் 15, 2019 முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெரும்பாலும் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதுபோன்ற போராட்டங்களில் நரேந்திர மோடியின் மனைவியும் கலந்து கொண்டதாக சமூக வலைதளவாசிகள் கூறி வருகின்றனர்.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த புகைப்படம் பிப்ரவரி 13, 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதனுடன் வெளியான செய்தி தொகுப்பில், “பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஆதரவற்றோருக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்” எனும் தலைப்பிடப்பட்டுள்ளது.

போலி செய்திகள் பரப்புவதில் கடந்த ஆனது வருடங்களாக பாஜக வினர்தான் முன்னணியில் இருந்தனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு எதிராக ஒரு இந்து பேசினாலும் அவரைப் பற்றி போய் செய்திகள் பரப்புவதில் பாஜகவினர் வல்லவர்கள். இப்போது அவர்களுக்கே ஆப்பு வைக்கிற மாதிரி போய் செய்தியை யாரோ பரப்பி இருக்கின்றனர்

தன்வினை தன்னை சுடும் என்று சும்மாவா சொன்னார்கள்?


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top