பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்

பெரியாரை அவதூறாக பேசியதாக, நடிகர் ரஜினிகாந்த் மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுக்கும் மேலாக நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது அறிந்ததே.இதுகுறித்து கேட்கும் போதெல்லாம் தனக்கு மனதில் தொன்றியதைஎல்லாம் பேசி சர்ச்சைக்குள்ளாவது.அந்த சர்ச்சையின் வழியாக, தான் நடிக்கும் படத்துக்கு விளம்பரம் தேடுவது என்று ஒரு வழக்கத்தை வைத்திருக்கிறார் திருவாளர் ரஜினிகாந்த்.இப்போதும் ஒரு சர்ச்சையில் சிக்கி தர்பார் படத்திற்கு விளம்பரம் தேடுவதாக சொல்லப்படுகிறது.  

சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், முரசொலி பத்திரிகை மற்றும் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் திராவிடர் விடுதலைக்கழக நகர தலைவர் நேரு தாஸ் தலைமையில் அந்த கட்சியினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

சென்னையில் கடந்த 14-ந்தேதி நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமர், சீதை ஆகியோரின் உருவங்களை எடுத்து சென்றது தொடர்பாக ஒரு அப்பட்டமான பொய்யை பேசியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்பி, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153-ஏ மற்றும் 505 ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், திருப்பூரிலும் நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில பொருளாளர் துரைசாமி தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு மனுவை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர். அதில் பெரியாரை அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழக அமைப்பாளர் தனலட்சுமி தலைமையில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆதாரமில்லாத தகவலை கூறிய நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அப்போது திராவிடர் விடுதலை கழக நிர்வாகி வைரவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.இந்த புகார்களை போலீசார் பெற்றுக்கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் ஆதரவாளர் ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் பயப்படுவதாக நம்மிடையே ஒரு ரசிகர் சொல்லிச்சென்றார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top