ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு

டெல்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் எழுப்ப முயன்றதும் அது இரு நாட்டு பிரச்சனை சுமூகமாக முதலில் பேசட்டும் என்று மற்ற நாடுகள் கேட்டுக்கொண்டதையும் அறிவோம்.

இது நடந்து கொஞ்ச நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் மீது வைத்திருந்த தேவையற்ற கோபத்தை தளர்த்தி இருக்கிறது.தானே முன் வந்து பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டிருக்கிறது  

டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார்  கூறியதாவது:-

“இந்த ஆண்டு இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இது நாடுகளின் பிரதமர்கள் சந்திக்கும் மாநாடாகும், இதில் பன்முக வர்த்தக ஒத்துழைப்பு விவாதிக்கப்படும். ஷாங்காய் ஒத்துழைப்பு ஏற்பாட்டின் நடைமுறைகளின் படி 8 உறுப்பு நாடுகள் மற்றும் 4 நோக்கு நாடுகள் மற்றும் பிற பன்னாட்டு உரையாடல் கூட்டாளிகள் மாநாட்டு வரவேற்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.

ஷாங்காய் அமைப்பில் உள்ள 8 உறுப்பு நாடுகள் மற்றும் 4 பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் எழுப்ப முயன்றதை சுட்டிக்காட்டிய ரவீஷ்குமார், இது போன்ற நடவடிக்கையை சீனாவும், பாகிஸ்தானும் எதிர் காலத்தில் தவிர்க்க வேண்டும்.என்று கேட்டுக்கொண்டார்.[காஸ்மீர் விசயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உலக அளவில் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது]

பிறகு இன்னும் கீழிறங்கி “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏதேனும் ஒரு விவகாரம் விவாதிக்கப்பட வேண்டுமானால், அது இருதரப்பு ரீதியாக விவாதிக்கப்பட வேண்டும்” என்றார். [இது பாகிஸ்தானுடன் நாங்கள் [பாஜக அரசு] தயாராக இருக்கிறோம் என்று சொல்வதாகவே இருந்தது ]

இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை 8 உறுப்பு நாடுகள். ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகியவை நோக்கு நாடுகள்.

இந்நிலையில் இந்த மாநாட்டுக்காக இம்ரான் கான் வரவேற்கப்படுவார் என்று தெரிகிறது, அவர் அழைப்பிதழை ஏற்றுக் கொண்டால் 2014-ல் மோடி பதவியேற்புக்கு நவாஸ் ஷெரீப் வந்த பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வருகை முக்கியத்துவம் பெறும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top