உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு இன்று காலை தொடங்கியது

உலகப் புகழ் பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு நடத்துகிறது போட்டி இன்று காலை  தொடங்கியது. தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் போட்டியை தொடங்கி வைத்தனர்.  முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

இதில்   700 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்குபெறுகின்றனர்.  ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் 2 கார்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது. பிரபலமான ஜல்லிக்கட்டுப் போட்டி என்பதால் இதைப் பார்ப்பதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வந்து உள்ளனர். ஏராளமான வெளிநாட்டினரும் குவிந்து உள்ளனர்.

பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  இந்த போட்டியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘சின்ன கொம்பன்’ காளையும்  பங்குபெறுகிறது.

முதலில் மூன்று கோயில் காளைகளும், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் சார்பில் ஒரு காளையும் அவிழ்த்துவிடப்பட்டன.

தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், மதுரை எஸ்.பி.மணிவண்ணன், மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோர் தலைமையில் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை வழங்க தயார் நிலையில் மருத்துவக் குழு உள்ளது.

சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது

ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 75 வீரர்கள் வீதத்தில் களமிறக்கப்படுகின்றனர். இதுவரை 20 வீரர்கள் காயமடைந்து உள்ளனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top