குடியுரிமை திருத்த சட்டம்-2019 க்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

குடியுரிமை திருத்த சட்டம்-2019 க்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, கடந்த 10-ந்தேதி மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தில் அரசே வன்முறை ஏற்படுத்திய சம்பவங்களும் அரங்கேறியது.


இந்த சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்டிரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் முதன்முறையாக ஒரு மாநில அரசு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. கேரள மாநில அரசு தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-


மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் நிர்ணய சட்டப்பிரிவுகள் 14 (சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்), 21 (வாழ்வதற்கான உரிமை, தனிநபர் சுதந்திரம்) மற்றும் 25 (சுதந்திரமாக தொழில் செய்தல், விரும்பிய மதத்தின் நடைமுறைகளை பின்பற்றுதல்) ஆகியவற்றுக்கு எதிரானது.

அரசியல்சாசனத்தின் அடிப்படையான சம உரிமை, சுதந்திரம், மதசார்பின்மை ஆகியவற்றுக்கு எதிரானது. எனவே இந்த சட்ட திருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேரள மாநில அரசின்  இந்த மனு அரசியலமைப்பு சட்டத்தின்  131 வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் அல்லது மத்திய மற்றும் மாநிலங்களுக்கு  இடையேயான மோதல்களில் சர்ச்சையை நேரடியாக அறிந்துகொள்ள உச்சநீதிமன்றம் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.ஆகையால் மனுவை ஏற்றுக்கொண்டுள்ளது  

256 வது பிரிவின் கீழ் எங்களை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கட்டாயப்படுத்தப்படுவது  “வெளிப்படையாக தன்னிச்சையானது, நியாயமற்றது, பகுத்தறிவற்றது மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்”. என்று கேரளா தனது மனுவில் கூறியிருக்கிறது

எவ்வாறாயினும், மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தினை  அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் சவால் செய்ய 131 வது பிரிவின் கீழ் ஒரு மாநிலத்திற்கு உண்மையிலேயே வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் இருந்து இரண்டு முரண்பட்ட தீர்ப்புகள் உள்ளன.

2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட முதல் தீர்ப்பு – மத்திய பிரதேசம் மற்றும் இந்திய யூனியன் – 131 வது பிரிவின் கீழ் மாநிலங்கள் ஒரு மத்திய சட்டத்தை சவால் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறது.

இரண்டாவது தீர்ப்பு; 2015 ம் ஆண்டு ஜார்க்கண்ட் Vs பீகார் மாநிலத்திற்கு நடந்த வழக்கு ஒன்றில்  எதிர் தரப்பின் கருத்தை இறுதி தீர்மானத்திற்காக உச்சநீதிமன்றத்தின் அதிக நபர்களை கொண்ட பெரிய அமர்வுக்கு பரிந்துரைத்து இருக்கிறது

கேரள அரசின் இந்த மனுவுடன் சேர்த்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 59 மனுக்களும் வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கேரள மாநில அரசு முதல் முறையாக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

சேவற்கொடியோன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top