50 வருடங்களுக்கு மேலாக வளர்ந்திருந்த 30 மரங்களை தூய்மை பசுமை விழாவுக்கு வெட்டி சாய்த்தது;அதிமுக அரசு

தூய்மை பசுமை விழாவிற்காக பீர்க்கன்கரணை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

பீரக்கன்காரணை பேரூராட்சியில் “தூய்மை பசுமை விழா” வருகின்ற ஐனவரி 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இதில் பிளாஸ்டிக் மாற்று பொருள் கண்காட்சியை செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ் தொடங்கி வைக்கிறார்.


பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பேரூராட்சிகள் சார்பில் நடைபெறும் இந்த பிளாஸ்டிக் மாற்று பொருள்காட்சிக்கு பீர்க்கன்காரணை பேரூராட்சியில் அலுவலகத்தில் மேற்கூரை பந்தல், சிறிய கடைகள் மற்றும் ஸ்டால்கள் அமைப்பதற்காகவும் 50 வருடங்களுக்கு மேலாக வளர்ந்து இருந்த 30-க்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளது.

வெட்டி சாய்த்த மரங்களை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மரங்களை வளர்க்க பல விதமான முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் “தூய்மை பசுமை விழா” என்று கூறி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top