அநியாயமாக கொல்லப்பட்ட அப்சல்குரு; சிக்கியுள்ள தாவீந்தர் சிங்! பயங்கரவாதிகளிடம் ரூ.12 லட்சம் பெற்ற விவகாரம்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை போலீஸ் டி.எஸ்.பி. ஒருவர் காரில் அழைத்துச்சென்ற போது சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி நாசவேலைக்கு அழைத்து செல்ல பயங்கரவாதிகளிடம் டி.எஸ்.பி. ரூ.12 லட்சம் வாங்கியதும், அவர்களுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.


ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ராணுவம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக சென்ற கார் ஒன்றை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

காரில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவர் போலீஸ் துணை சூப்பிரண்டு தாவீந்தர் சிங் என்பதும் மற்ற 2 பேரும் ஹிஸ்புல் முஜாகிதீன், லஸ்கர்-இ- தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் பெயர்கள் நவீத், ஆஷிப் அகமது என்பதும் தெரிய வந்தது. காரில் இருந்து துப்பாக்கிகள், கையேறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் நவீத் போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அவர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்து ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். போலீஸ் டி.எஸ்.பி. தாவீந்தர் சிங்கிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பயங்கரவாதிகளுடன் போலீஸ் டி.எஸ்.பி. தாவீந்தர் சிங்குக்கு தொடர்பு இருந்திருக்கிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டி இருக்கிறார்கள். இதற்காக டெல்லி செல்ல அவர்கள் முடிவு செய்து அதுபற்றி தாவீந்தர் சிங்கிடம் தெரிவித்து உதவி செய்யும்படி கேட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் தாங்கள் தனியாக சென்றால் மாட்டிக் கொள்வோம் என்பதால் காரில் போலீஸ் அதிகாரி உடன் இருந்தால் எளிதாக தப்பிவிடலாம் என்று முடிவு செய்தனர்.

இதற்காக போலீஸ் டி.எஸ்.பி. தாவீந்தர் சிங்குக்கு ரூ.12 லட்சம் தருவதாக பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட தாவீந்தர் சிங் காரில் பயங்கரவாதிகளை தன்னுடன் சோபியான் மாவட்டத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அவர் போலீஸ் சீருடையில் இருந்துள்ளார். இதனால் போலீஸ் சோதனையில் யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்துள்ளார். ஆனால் சோதனையில் போலீசார் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

இதனால் டெல்லியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி மற்றும் நாசவேலைக்கான சதிதிட்டம் உரிய நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் போலீஸ் டி.எஸ்.பி. காஷ்மீரில் உள்ள தனது வீட்டில் 3 பயங்கரவாதிகளை தங்க வைத்து உதவி செய்திருக்கிறார். பயங்கரவாதிகள் வெளியில் எங்காவது மறைந்திருந்தால் போலீசார் பிடித்துவிடுவார்கள் என்பதால் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் பயங்கரவாதிகளுக்கு வேறு எந்த வகைகளில் உதவி செய்திருக்கிறார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பயங்கரவாதிகளுடன் பிடிபட்டுள்ள தாவீந்தர் சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் வாங்கிய சிறந்த போலீஸ் அதிகாரிக்கான பதக்கமும் பறிக்கப்படுகிறது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் அவர்கள் தாவீந்தர் சிங்கிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011-ம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதலின் போது கைதான அப்சல்குரு, போலீஸ் அதிகாரி தாவீந்தர் சிங் தனக்கு உதவி செய்ததாக கூறி இருந்தார்.அப்போது உச்சநீதிமன்றம் கூட அப்சல்குருவின் வார்த்தையை கேட்கவில்லை

அப்போது அப்சல் குரு தன் வழக்கறிஞர் சுஷில் குமாருக்கு எழுதிய கடிதங்களில் தாவீந்தர் சிங் என்னும் காவல்துறை அதிகாரியைப் பற்றி விரிவாக குறிப்பிட்டிருந்தார். அப்பாவியான தன் வாழ்வை பணத்திற்காக மிரட்டி மிரட்டி எப்படி தூக்கு மேடை வரை கொண்டு வந்து நிறுத்தினான் இந்த அயோக்கியப்பயல் என்பதை விரிவாகவே எழுதியிருந்தார். அப்போது இந்த குரல்களைக் கேட்க எவரும் இல்லை. அப்சல்  கொல்லப்பட்டு விட்டார்.

அப்சலை மிரட்டி அவரிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்று வந்த தாவீந்தர் சிங் டெல்லியில் முகமறியா ஒருவருக்கு வீடு எடுத்துக் கொடுக்கும் படி அப்சலை நிர்பந்தித்துள்ளார். வீடு எடுத்துக் கொடுத்தால் அப்சலை தொடர்ந்து மிரட்டுவதை கைவிட்டு விடுவதாகவும் , பணம் கொடுப்பதாகவும் அந்த அப்பாவிக்கு ஆசை காட்டி எவனோ ஒருவனுக்கு வீடு எடுத்துக் கொடுக்க தூண்டினான் தாவீந்தர்.  அப்சல் வீடு எடுத்துக் கொடுத்தவந்தான் அவன்தான் நாடாளுமன்ற தாக்குதலோடு தொடர்புடையவன் .

அந்த தாக்குதலே காவல்துறை அதிகாரியான தாவீந்தரின் உதவியுடன் தான் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது,. அது மட்டுமல்ல சமீபத்தில்   இந்திய ராணுவத்தினர் மீதான தாக்குதலில் இவனது துணையில்லாமல் நடந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான்.

நாடாளுமன்ற  தாக்குதலையும் நடத்தி அப்பாவி அப்சலை அதற்கு குற்றவாளியாக்கி தூக்கிலும் ஏற்றி விட்டார்கள்

அப்சல் குரு அப்பாவி நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட உண்மைக்குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற குரல்களை கணக்கில் கொள்ளாத உச்சநீதிமன்றம் கூட்டு மனச்சாட்சி என்னும்  பெயரில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை விதித்தது.

எந்த குரலையும் கருத்தில் கொள்ளாமல் அப்சலின் மனைவி, மகனுக்குக் கூட தெரிவிக்காமல் தூக்கிட்டுக்கொன்றது காங்கிரஸ் அரசு.

தாவீந்தர் சிங் பற்றிய உண்மைகளை மக்கள் முன்னால் அரசு வைக்க வேண்டும்!

சேவற்கொடியோன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top