மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் முடிவுகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சிப் பதவியிடங்களில் மொத்தம் 27-ல் 26 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 13 இடங்களிலும் திமுக 12 இடங்களிலும் பாமக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

மாவட்ட ஊராட்சி துணைத்தலைவருக்கு மொத்தமுள்ள 27 பதவியிடங்களில் 26 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றன. இதில் அதிமுக 7 இடங்களிலும் திமுக 11 இடங்களிலும் பாமக 3 இடங்களிலும், பாஜக, காங்கிரஸ் தலா 2 இடங்களிலும் தேமுதிக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

சிவகங்கை மாவட்டம் ஊராட்சியில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக மாநில தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சினை காரணமாக 27 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை என்று மாநில தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றையத் தலைவர் பதவியிடத்திற்கான மறைமுகத் தேர்தலில் 287 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 140 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, திமுக 125, பாமக 7, காங்கிரஸ் 5, பாஜக 3, இ.கம்யூனிஸ்ட் 3, அமமுக 2, சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள 314 ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு 41 பதவியிடங்களில் போதிய உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததால் மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 273 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 107, அதிமுக 94, பாமக 19, காங்கிரஸ்8, தேமுதிக 7, அமமுக 5, பாஜக 4, இந்திய கம்யூனிஸ்ட் 3, சுயேச்சைகள் 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top