பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; கொல்கத்தாவிலும் பிரபலமாகும் ‘கோ பேக் மோடி’ இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள. பிரதமர் மோடியை எதிர்த்து  அவரது வருகையை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர் கூறுகையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என குறிப்பிட்டனர். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top