கல்கத்தாவில் பிரதமர் மோடி மம்தா பானர்ஜி சந்திப்பு;குடியுரிமைச் சட்டம் குறித்து பதில்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக  இந்தியா முழுவதும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் கடுமையான எதிர்ப்பு அலை மோடிக்கு எதிராக வீசிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தா சென்றார்.அங்கு அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடியும் சந்த்தித்துப்  பேசினார்கள்.

பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்கிடையே, கொல்கத்தாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ராஜ்பவனில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், ராஜ்பவனில் தங்கியுள்ள பிரதமர் மோடியும் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் மரியாதை நிமித்தமாக  இன்று மாலை சந்தித்துப பேசினார்கள்

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே அவற்றை கட்டாயம் திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top