அமித்ஷாவுக்கு மராட்டிய அரசு ‘செக்’;சொராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர்-நீதிபதி லோயா மரணம்! மறுவிசாரணை

சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணம் குறித்து மறுவிசாரணை நடத்தப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.


பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2005-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக் என்பவரை குஜராத் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். அதன்பின்பு அவரது மனைவி கவுசர் மற்றும் வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சொராபுதீன் சேக்கின் உதவியாளர் ஒருவரும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


இது போலி என்கவுண்ட்டர் எனவும், இதில் அப்போது குஜராத் மாநில மந்திரியாக இருந்த அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. அதன்பின்பு இந்த வழக்கில் இருந்து அமித்ஷா உள்பட 22 பேர் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு கோர்ட்டு நீதிபதி லோயா 2014-ம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நீதிபதி லோயா இயற்கை மரணம் அடைந்தார் என தெரிவித்தது.

இந்தநிலையில் மராட்டிய மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் நிருபர்களிடம் கூறுகையில், ‘நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், இதனால் வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் சிலர் என்னை சந்தித்து வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால் வழக்கு மறு விசாரணை நடத்தப்படும்’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top