டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலக கோரி-மாணவர்கள் இன்று பேரணி

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலக கோரி, மாணவர்கள் இன்று பேரணியாக செல்கின்றனர்.

பாஜக -ஏபிவிபி மாணவர்கள் ஏற்படுத்திய வன்முறைக்கு காரணமான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலக கோரி, மாணவர்கள் இன்று பேரணியாக செல்கின்றனர் நண்பகல்  12 மணிக்கு, மண்டி இல்லம் பகுதியில் இருந்து பேரணி தொடங்குகிறது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுங்களுடன் புகுந்த ஆர்.எஸ்.எஸுடன் தொடர்புடைய ஏபிவிபி மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.  இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்க தலைவி  உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து மாணவர்கள் அமைதி வழி   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்தில் பாஜக -ஏபிவிபி மாணவர்கள் ஏற்படுத்திய வன்முறை நடந்து 4 நாட்கள் ஆகியுள்ள போதிலும், மேற்கூறிய தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், டெல்லி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் தொடர்புடையவர்கள் பிடிபடுவார்கள் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், காயம் அடைந்து பாதிக்கப்பட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்

அதேபோல், பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை நடந்த பிறகு, உரிய நடவடிக்கைகள் எடுக்க தவறி விட்டதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் இன்று பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். நண்பகல்  12 மணிக்கு மண்டி இல்லம் பகுதியில் இருந்து பேரணி தொடங்குகிறது. பேரணியையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top