தமிழக சட்டசபையில் இன்று 3 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன

மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, கூட்டுறவு சங்க திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்கள் தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டன

தமிழக சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம்.  கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் நடைபெறும். அவ்வகையில் இவ்வாண்டிற்கான கூட்டம் கடந்த திங்கள் (ஜனவரி 6ம் தேதி) தொடங்கியது. 

இந்நிலையில், கூட்டுறவு சங்க திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்கள் இன்றைய சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தரின் வயது வரம்பை உயர்த்துவது உள்ளிட்ட சில அம்சங்களுடன் மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்ய உள்ளார்.

கூட்டுறவு சங்க தலைவர், உறுப்பினர்கள் தவறு செய்தால் மாவட்ட இணைபதிவாளரே அவர்களை சஸ்பெண்ட் செய்யலாம் போன்ற சில அம்சங்களுடன் கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு தாக்கல் செய்ய உள்ளார்.

அதே போல், வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் துரைக்கண்ணு தாக்கல் செய்ய உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top