ஆளுநர் உரையைக் கிழித்தெரிந்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் வெளி நடப்பு !

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் ஜன.6-ம் தேதி தொடங்கியது.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பிறகு ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கப்பட்டது.

அப்போது, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனவும், உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அப்போது, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட்டார். அப்போது, ஜெ.அன்பழகன், அமைச்சரை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பேரவை முன்னவரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், ஜெ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்ததையடுத்து அந்நடவடிக்கை கைவிடப்பட்டது.

இதன்பின், ஜெ.அன்பழகனின் நேரம் முடிவடைந்ததாக சபாநாயகர் தனபால் கூறினார். அப்போது, ஜெ.அன்பழகன் ஆளுநர் உரையைக் கிழித்து, சபாநாயகரின் மேசையில் போட்டார். இதனால், நடப்புக் கூட்டத்தொடர் மட்டுமின்றி அடுத்த கூட்டத்தொடரிலும் ஜெ.அன்பழகன் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜன 9-ம் தேதி வரை ஜெ.அன்பழகன் கூட்டத்தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.

ஆளுநர் உரையைக் கிழிப்பது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரின் கையில் இருந்த பட்ஜெட் நகலைப் பிடுங்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கிழித்தெறிந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது

3-வது முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு சபை விதிகள் தெரியும். கண்ணியம் தெரியும். சபாநாயகர் எல்லாவற்றையும் காலில் போட்டு மிதிக்கிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்காவிட்டால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இப்படிப் போராட்டங்கள் நிகழாது. இதைத்தான் நான் பேசினேன்.என்றார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top