அமெரிக்க படை தளம் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல் 80 பேர் பலி : வீடியோ வெளியீடு

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு படையின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மேலும், உளவுப் பிரிவுத்தலைவர் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பழி தீர்க்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த சூழலில் ஈராக்கில் தனது ராணுவத்தை குவிக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருவது ஈரான் ராணுவத்தை மேலும் கோபம் கொள்ளச் செய்தது.

ஈராக்கில் இருந்து படைகளை திரும்பப்பெற அமெரிக்கா மறுத்து உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,ஈராக்கின் அல் அசாத் மற்றும் எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசித் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அல் அசாத் பகுதியில் இருந்த அமெரிக்க படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.  தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. ஈரானின் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது சுலைமானி மரணத்திற்கான பழிக்கு பழி வாங்கும் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகனும் உறுதி செய்துள்ளது. தங்கள் நாட்டு படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க பயங்கரவதிகள் பலியானதாக ஈரான் அரசு டிவி செய்தி வெளியிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top