உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்; தமிழக அரசு

சட்டப்பேரவையில் ஆளுநர் நேற்று ஆற்றிய உரையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பெண்ணையாறு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் முன் அனுமதியின்றி கர்நாடகத்தில் உள்ள காவிரி வடிநிலப் பகுதிகளில் எவ்வித கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாமல் நிறுத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

பெண்ணையாற்றுப் படுகையில் உள்ள மார்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், பெண்ணையாறு விவகாரம் குறித்து தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விரைவில் பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்.

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி பெண்ணையாறு வடிநிலப் பகுதிகளில் அணைகள், நீரோட்டப் பாதையை மாற்றியமைக்கும் எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

.இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top