வேகமாக பரவும் ஆஸ்திரேலிய காட்டுத்தீ! அழியும் விலங்குகள்!! புகைப்படங்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது.

இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 23பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாராளுமன்றம் தெரிவித்தது.

இதற்கிடையே, நியூசவுத் வேல்ஸ் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது என அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காடுகளில் பற்றி எரியும் தீயை தொடர்ந்து, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.  

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியாவில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டது.ஆனால் ,ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ அதிகமாகி விட்டதால்  பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது இந்திய பயணத்தை ரத்துசெய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த 3000 துணை ராணுவப் படையை உதவிக்கு அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கங்காரு தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர்பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து தீவிபத்தால் பலி எண்ணிக்கை 23யை எட்டி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் தென் கடற்கரை மற்றும் விக்டோரியாவில் உள்ள கிழக்கு கிப்ஸ்லேண்டில் உள்ள தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீ வேகமாக பரவி வருகிறது.


இங்கு வெப்ப நிலை சனிக்கிழமை பிற்பகல் 44 டிகிரி செல்சியஸ் (111 டிகிரி பாரன்ஹீட்) ஐ எட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு சிட்னியின் புறநகர்ப் பகுதியான பென்ரித்தில், வெப்பநிலை 48.9 டிகிரி செல்சியஸ் (120 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்தது.


விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஓமியோ பிராந்தியத்தில் ஒரே இரவில் தீ விபத்து 6,000 ஹெக்டேர் (23 சதுர மைல்) அளவுக்கு தீப்பிடித்ததாக கிப்ஸ்லேண்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top