கர்நாடகாவில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்; விவசாயிகள் ரயிலில் கைது

கர்நாடகாவில் பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும்  பிரதமர் மோடிக்கு  எதிராக கருப்புக்கொடி காட்டி, தங்கள் எதிர்ப்பை காட்ட விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர்.

பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 107-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக  இன்று வருகை தருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2 மணியளவில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திறங்குகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் துமகூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு மதியம் 2.15 மணியளவில் அவர் செல்ல இருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, , துமகூரு ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். . துமகூருவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா, மணிப்பூர், ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரிகள், உத்தரகாண்ட் மாநில கவர்னர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக ராஜ்ய ரைதா சங்கத்தை சேர்ந்த 25 விவசாயிகள்,  கருப்புக்கொடி காட்டி மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், துமுகூருவுக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை ஷிமோக்காவில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top