தாக்குதல் நடவடிக்கையே வடகொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும்;கிம் ஜாங் அன்

தாக்குதல் நடவடிக்கைகள் அவசியம்.அதுதான் வடகொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-வடகொரியா இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதங்களை சோதித்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆலோசனை நடத்தினார். எந்த வித திட்டமிடலும் இல்லாமல் கிம் ஜாங் அன்னின் உத்தரவின் பேரில் திடீரென நடந்த ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை தொடங்கி நேற்று வரை தொடர்ந்ததாக அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில், வெளியுறவு விவகாரங்கள், பாதுகாப்பு படைகள் போன்றவற்றின் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகவும், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்துவதற்கு நேர்மறையான மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் அவசியம் என்பதை கிம் ஜாங் அன் வலியுறுத்தியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் புத்தாண்டு உரையின்போது நாட்டின் பாதுகாப்பு மற்றும் அணுஆயுத விவகாரம் தொடர்பாக கிம் ஜாங் அன் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பான பல முக்கிய அறிவிப்புகளை கிம் ஜாங் அன் முந்தைய புத்தாண்டு உரைகளின்போது வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top