கா‌‌ஷ்மீர் விவகாரம்; இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் ஆலோசிக்க முடிவு;சவுதி அரேபியா ஏற்பாடு

சவுதி அரேபியா இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளது.அதில் முக்கியமாக காஸ்மீர் விவகாரம்குறித்து  பேசப்பட இருக்கிறது .

கா‌‌ஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டை கூட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் பர்கான், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ‌ஷா முகமது குரே‌ஷியிடம் நேரில் தெரிவித்தார்.


அவர் ஒரு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தபோது இச்சந்திப்பு நடந்தது. அப்போது, கா‌‌ஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றியும் இளவரசரிடம் சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி எடுத்துரைத்தார். மாநாடு நடத்தும் தகவலை அவரிடம் இளவரசர் தெரிவித்தார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, 57 முஸ்லிம் நாடுகளை கொண்டது ஆகும்.

இஸ்லாமிய நாடுகள் என்னிடம் அன்பு பாராட்டுகின்றன இந்தியாவில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் இசைவு தெரிவிக்கின்றன என்று சொன்ன பிரதமர் மோடிக்கு இந்த ஆலோசனை கூட்டம் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது  

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top