குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஈரோட்டில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்

ஈரோடு செங்கோடம்பள்ளம் யாழ்நகரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பெண்கள் கோலமிட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.

சென்னையில் கல்லூரி மாணவிகள் சிலர் ஒன்று கூடி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நூதன முறையில் வீடுகள் முன்பு கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று சென்னையில் பலர் வீடுகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டிருந்தனர்

இதையடுத்து கோலம் போட்ட 6 மாணவிகளை போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

மாணவிகள் கைது நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


இந்நிலையில் ஈரோடு, செங்கோடம்பள்ளம், யாழ் நகர் பகுதியில் உள்ள 4 வீடுகள் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு “ வேண்டாம் குடியுரிமை சட்ட திருத்தம்” “நோ சி.ஏ.ஏ நோ என்.ஆர்.சி” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. முக்கியாமாக திரோபதி அம்மன் கோவில் வாசலில் இதனால் கோலம் போடப்பட்டிருந்தது மிகுந்த பரபரப்பை உருவாக்கி விட்டது


இதுகுறித்து கோலம் போட்டு எதிர்ப்பை தெரிவித்த தி.மு.க இலக்கிய அணி துணை அமைப்பாளர் வீரமணி ஜெயக்குமார் என்ற பெண் கூறும்போது, “குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நாங்கள் கோலம் போட்டு வாசகங்கள் எழுதி உள்ளோம். சென்னையில் இது போன்று கோலம் போட்ட பெண்கள் 6 பேரை கைது செய்துள்ள நடவடிக்கைக்கு நான் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். கருத்துக் கூறுவது எங்களது உரிமை. எங்கள் உணர்வுகளை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது” என்றார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் ராஜாஜி புரத்தல் உள்ள வீடுகளின் முன்பும் குடியுரிமை சட்டத்தை கண்டித்து பெண்கள் கோலம் வரைந்தனர்.

வருகிற பொங்கலுக்கு குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான கோலம்தான் தமிழகமெங்கும் இடம்பெறும் போலிருக்கிறது!

,


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top