குடியுரிமை திருத்தச்சட்டம்; அரசியலமைப்பு பண்புகளுக்கு எதிரானது;தெரியவேண்டிய உண்மைகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை மட்டுமல்லாமல் ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது

மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டங்களும்  சமூகச்செயல்பாட்டாளர்களின் அறிவார்ந்த பார்வையும் இச்சட்டத்தின் எதிர்கால விளைவுகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது என்றாலும்,அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில்,நீதியின் பார்வையில் இந்த குடியுரிமை திருத்தச்சட்டம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும், என்பதே இக்கட்டுரையின் நோக்கம்……ஆசிரியர்     

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 5 முதல் 11  வரை இந்தியக் குடிமக்களின் குடியுரிமை குறித்து விளக்குகிறது . அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி மத்திய அரசு இந்திய குடியுரிமை சட்டத்தை 1955 ல் இயற்றியது . அந்த சட்டத்தில் பிரிவு 2 ஆனது சட்ட விரோதமாக குடியேறியவர்கள் யார் யார் என்பதை வரையறை செய்கிறது அதன் படி உரிய ஆவணங்கள் , மற்றும் கடவுச் சீட்டு இல்லாதவர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்று வரையறை செய்கிறது. இந்த பிரிவில் தான் மத்திய அரசு [2019 ல்]சட்டதிருத்தம் முலம் சில சில சரத்துக்களை இணைத்துள்ளது அது என்னவென்று காணலாம்

2019 குடியுரிமை சட்டத்திருத்தம்

இந்த சட்ட திருத்தமானது  பாஜக கட்சி 2014 ல் ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு வருடம் கழித்து  கடந்த 19.07.2016 ம் தேதியில்  மக்களவையில் குடியுரிமை  திருத்தச் சட்டம் 2016 என்று அறிமுகம் செய்யப்பட்டது . அது 12 .08.2016 தேதி பாராளுமன்றக் கூட்டு குழுக்கு அனுப்பபட்டது.  07.01.2109 ம் தேதியில்  பாராளுமன்றக்  கூட்டு குழு அறிகையை சமர்ப்பித்தது . அதன் பிறகு 08.01.2019 தேதி அன்று  இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.அதன் பின்பு மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா செல்லும் தன்மையை இழந்தது .

17 வது மக்களவை கூடியவுடன்  04.12.2019 தேதியன்று பார்லிமெண்டில் அறிமுகம் செய்யப்பட்டது . அதன் பிறகு கடந்த 10.12.2019 ம் தேதியன்று மக்களவையில் பாஜக கட்சி தனது பெரும்பான்மை உறுப்பினர்களின் பலத்தினால் 311 க்கு 80 என்ற வித்தியாசத்தில் நிறைவேறியது . பின்பு மாநிலங்களவையில்  11.12.2019 ம் தேதியன்று 125 க்கு 105 என்ற வித்தியாசத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க இரு தமிழக கட்சிகளின் உதவியுடன் நிறைவேறியது. அதன் பின்பு 12.12.2019 ம் தேதியன்று குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று இந்த குடியிரிமை சட்ட திருத்தம் மசோதா சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டது .

இந்த குடியிரிமை சட்ட திருத்தம் முலம் 2 (1)(b) என்ற பிரிவு இணக்கப்பட்டுள்ளது அதன் படி

31.12.2014 க்கு முன்பாக இந்தியாவிற்கு வந்துள்ள பாகிஸ்தான் , பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு நபரும் அவர் இந்து , புத்தம் ,ஜெய்ணம் , பார்சி, கிறிஸ்துவம் ஆகிய மதங்களுக்குள் ஒன்றை பின்பற்றும் நபராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு பிரிவு 3 (2) (c) of Pass Port entry to India Act 1920 and Forigeners Act 1946 or any rule thereunder ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது மேலும் ,அவர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டரர்கள்.( அதாவது பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவிற்குள் வந்தவர்கள், .வெளிநாட்டினர்)

பிரிவு 6 (c) ன் படி அவ்வாறு குடியேறியவர்கள் இந்தியாவில் வசிப்பதற்கான காலக்கேடு ஏழு வருடத்தில் இருந்து ஐந்து வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.

பிரிவு 6-[b] ன் படி அவ்வாறு குடியேறியவர்கள் மீது நிலுவையில் இருக்கும் குடியுரிமை மற்றும் சட்ட விரோதமான குடியேற்றம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் இல்லாத நிலையை அடையும்

மேலும், குடியுரிமை பதிவு தொடர்பான அதிகாரங்கள்  மத்திய அரசின் அதிகாரம் சார்ந்தது.. ஆனால் இந்த பிரிவு அசாம் ,மேகாலயா , மிசோரம் அல்லது திரிபுராவிற்கு பொருந்தாது.  

ஆக இதன் மூலம் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் குடியுரிமை சட்டம் மூன்று அடிப்படையில் செயல்படுகிறது

1)Nationality : Pakisthan, Bangaladesh, Afganisthan – only 3 countries.

2)Religion : Hindu, Buddhist , Parsi, Jews, and christian

3)Time : 24.12.2014

ஆக ,இந்தியாவில் தற்போது குடியிருந்து வரும் எந்த நபரரக இருந்தாலும் அவர்கள் மேற்கண்ட நிபந்தனைகளுக்குள் வரவில்லை என்றால் அவர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என கருதப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி எந்த உரிமையும் பெறமுடியாமல் அவர்கள் முகாம்களில் அடைக்கப்படலாம். குறிப்பாக இஸ்லாமியர்கள், ஈழ அகதிகள்.

அரசுசொல்லும் காரணம் :

அ) இது நான் சிட்டிசனுக்கு மட்டும்தான் பொருந்தும்  

ஆ) இது அரசின் கொள்கை முடிவு .

இ) இது ஒரு மதத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மத     சிறுபான்மையினரை அரவணைத்து ஏற்றுக்கொள்ளும் சட்டம்

மேற்கண்ட அரசின் காரணங்கள் அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு , அது எந்த மதத்தையும் சாரதா அரசைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.மதத்தின் அடிப்படையில்  எந்த ஒரு பாகுபாடும் செய்யக்கூடாது  என்று வலியுறுத்துகிறது மதச்சார்பற்ற தன்மை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைத் தன்மை என்று உச்சநீதிமன்றம் பல வழக்கில் உறுதிபடுத்தியுள்ளது. அவ்வாறு இருக்கையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அதிகாரத்தின் படி குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றிய மத்திய அரசு, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்புகளில் ஓன்றான மதச்சார்பின்மையை மீறி எவ்வாறு மதத்தின் அடிப்படையில் வகைப்பாடு செய்து குடியுரிமை வழங்க முடியும்?.

Babasaheb Ambedkar, Chairman, Drafting Committee of the Indian Constitution with other members.

மேலும், ஒரு வகைப்பாடு அறிவார்ந்த நிலையில் இருக்க வேண்டும். ஆனால் இந்த திருத்த சட்டம் தற்போது மேற்கண்ட மூன்று நாடுகளில் இருந்து வந்தவர்களை இரண்டு வகையாக மதத்தின் அடிப்படையில் பிரிக்கிறது. அதன்படி இஸ்லாமியர்களையும் ஈழ அகதிகளையும் அறிவுக்கு ஒவ்வாத வகையில் விலக்கி வகைப்படுத்துகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 14, 15, 21 ஆகியவற்றை மீறக்கூடியது.  மேலும், இந்த வகைப்பாடு ஒருதலைப்பட்சமானது , எதேச்சதிகார போக்கை கொண்டுள்ளது ஆகையால், எந்த வகையிலும் இந்த சட்டம் ஏற்புடைதாக இல்லை . பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துவை  ஏற்றுக்கொள்ளும்  சட்டம், இலங்கையில்  இருந்து வரும் ஈழத் தமிழர் [இந்துவாக இருந்தாலும்]  ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, இது அப்பட்டமான மனித உரிமை மீறல்  மற்றும் நியாயமற்ற வகைப்பாடு.மேலும் , சரத்து 14, 21 நான் சிட்டிசனுக்கும் பொருந்தும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அரசின் கொள்கை முடிவு அரசியல் அமைப்பு சட்டத்தின் கூறுகளை ஒத்துதான் இருக்க வேண்டுமே தவிர,கொள்கை  முடிவு என்று அரசியல் அமைப்பு சட்டத்தின் பண்புகளை மீறுமாறு சட்டம் இயற்ற முடியாது, அவ்வாறு மீறினால் நீதிமன்றம் ஆய்வு செய்து அத்தகைய சட்டம் செல்லாது  என்று விளக்கமாக எடுத்துரைக்கும்.  அதன் படி குடியுரிமை திருத்த சட்டம் எந்த வகையிலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி செல்லக்கூடியதல்ல!

தேசியக் குடியுரிமை பதிவேடு :

தேசியக் குடியுரிமை பதிவேடு விதி முதன்முதலில் அசாமில் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி அசாமில்  உள்ள குடிமக்கள் அரசு குறிப்பிட்டுள்ள ஆவணங்களை காட்டி தன்னுடைய குடியுரிமையை நிருபிக்க வேண்டும். அவ்வாறு நிருபிக்க முடியாதவர்கள் கிட்டத்தட்ட பத்தொன்பது லட்சம் பேர் உள்ளதாக தெரிய வந்தது. அதில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவரும் அடங்கும் . பத்தொன்பது லட்சம் பேரில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் என தெரிய வந்ததும் அவர்களை மட்டும் இந்தியாவிற்குள் அனுமதித்து,  குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் இந்த குடியுரிமை திருத்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த கணக்கெடுப்பில் வந்துள்ள இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மறுத்து விட்டது.இனி அவர்கள்  சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதி கேம்பில் அடைக்கப்படலாம் . உலகின் மிகப்பெரிய கேம்பாக அது இருக்கப்போகிறது. அமித்ஷா இந்த தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை நாடு முழுதும் விரிவு படுத்த போவதாக அறிவித்து உள்ளார். அப்படி என்றால்  நாம் அனைவரும் உரிய ஆவணங்களை காட்டி நம்முடைய குடியிருப்பை நிருபிக்கவேண்டும்.இல்லை என்றால் நாம் நம்முடைய குடியுரிமையை இழக்க நேரிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு இந்த சட்டம் எத்தகைய கொடூரமான சரத்துக்களை கொண்டுள்ளது என்பதை  சிறிதளவு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்

ஆனாலும், இந்திய அரசியல் அமைப்பின் மைல்கல்லாக உள்ள கேசவானந்த பரரதி என்ற வழக்கு, பார்லிமென்ட் எத்தகைய மெஜாரிட்டி உடையதாக இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்புகளை திருத்தும் அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளது. மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையும் ( இந்தியா,சோசியல் ,செக்குலர்  ,நாடு  ) மதச்சார்பற்ற தன்மையும் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கூறுகள் என்று கூறியுள்ளது . எனவே கேசவானந்த பாரதி வழக்குபடி குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைப் பண்புகளை மீறியுள்ளது என்று தெரியவருகிறது . மேலும் சரத்து 21 ன் படி ஒவ்வொரு மனிதனும் கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது. அந்த வகையில் இந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும். நாம் இதுவரைக்கும் நம் சந்ததிகள் காணாத வகையில் ஒரு மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை இந்த சட்டத்தை படிக்கும் போது தெரிகிறது.

உருவிலி


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top