வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி; குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மும்பையில் ஆர்ப்பாட்டம்

பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியான வஞ்சித் பகுஜன் அகாடியின்  கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தாதரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏராளமாக பொதுமக்கள் கலந்துகொண்டனர்  

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி சார்பில் நேற்று மும்பை தாதர் டி.டி. சர்க்கிள் பகுதியில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  பல ஆயிரம் பேர்  கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் பேசுகையில், “மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு காரணமாக முஸ்லிம்கள் தவிர நாடு முழுவதும் 40 சதவீத இந்துக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பழங்குடியினர் மற்றும் வஞ்சிக்கப்பட்ட சாதியினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான பிரச்சினை அல்ல. ஆர்.எஸ்.எஸ். மற்றும் அரசியலமைப்பு இடையேயானது” என்றார்.

போக்குவரத்து போலீசார் மும்பை நோக்கி வந்த கனரக வாகனங்களை சுன்னாப்பட்டி எவரெட் நகரில் தடுத்து நிறுத்தி அவுசஜா மேம்பாலம், வடலா ரோடு, பக்திபார்க், சிவ்ரி வழியாக திருப்பி விட்டனர்.

இதேபோல் மும்பையில் இருந்து தாதர் டி.டி. நோக்கி வந்த அனைத்து வாகனங்களும் நய்காவில் நிறுத்தப்பட்டு பைவ்கார்டன் ராம்மந்திர் நோக்கி திருப்பிவிடப்பட்டன.

இதேபோல் குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்களின் தேசிய பதிவு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவற்றிற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று மும்பை மால்வானியில் பேரணி நடத்தினர். மால்வானியில் கேட் எண்-8 தொடங்கி டவுன்ஷிப் நகராட்சி பள்ளி வரை இந்த பேரணி நடைபெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top