ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி பாரத்மாதவிடம் பொய் சொல்கிறார் ராகுல்காந்தி ட்விட்

பிரதமர் மோடி தொடர்ந்து பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவான அகண்ட பாரதம் மற்றும் இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்கிற கோட்பாட்டை கடைப்பிடித்து இந்தியாவை இந்துக்களின் தேசமாக மாற்ற முயலுவதால் மோடியை ஆர்.எஸ்.எஸ். பிரதமர் என்று ராகுல் காந்தி வருணித்து இருக்கிறார்

நாட்டின் எந்த பகுதியிலும் தடுப்பு காவல் மையம் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். பிரதமர் பாரத் மாதாவிடம் பொய் சொல்லி இருக்கிறார் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டம்-வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடுமையாக குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் நகர்ப்புற நக்சலைட்டுகளுடன் இணைந்து முஸ்லிம்கள் தடுப்பு காவல் மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்று வதந்தியை பரப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

நாட்டில் எந்த ஒரு தடுப்பு காவல் மையமும் இல்லை என்றும் மோடி பொய்யான தகவலை தெரிவித்து இருந்தார் .

இதற்கு ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து உள்ளார். மோடியை ஆர்.எஸ்.எஸ். பிரதமர் என்றும் தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி கூறும்போது “நாட்டின் எந்த பகுதியிலும் தடுப்பு காவல் மையம் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். பிரதமர் பாரத்மாதாவிடம் பொய் சொல்லி இருக்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் தடுப்பு காவல் மையத்துக்கான கட்டிடங்கள் கட்டும் வீடியோ கிளிப்பையும் ராகுல் காந்தி அந்த பக்கத்தில் இணைத்துள்ளார், மேலும் மோடி பேசும் வீடியோவையும் அவர் இணைத்து உள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top