தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையோடு துவங்குகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது

2020-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த  கூட்டத்தொடரில்  கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார்.

இது குறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள  அறிக்கையில், தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது.  ஆண்டின் முதல் கூட்டம் என்பதால்  6-ம் தேதி கவர்னர் உரையுடன் காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது.  

கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து  6-ம் தேதி அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top