குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து அரசியல்கட்சி தலைவர்கள் பேரணியில் பெரும் முழக்கமிட்டனர்

”பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே” என்ற முழக்கத்தை ஓங்கி எழுப்பிய படி அனைத்துக் கட்சி தலைவர்களும் பேரணியில் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, என பலரும் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முழக்கத்தை உச்சரித்தபடியே நடந்து சென்றனர்.

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே புறப்பட்ட பேரணி புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை சென்றடைந்தது. வழிநெடுகிலும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும், தொண்டர்களும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

”பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே”, ” எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம் ஈழத்தமிழர்களும், இஸ்லாமியர்களும் எங்கள் ரத்தம்”, ”வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்.. குழி பறிக்கும் சட்டம் வேண்டாம்” என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசுக்கு அதிமுக அரசு துணை போகக் கூடாது என்றும், ஈழத்தமிழர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்துவிட்டதாகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அதிமுக எம்.பி.க்களை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் ஒலித்தன.

பேரணி நடைபெற்ற சுமார் ஒன்றை மணி நேரமும் தொடர்ந்து முழக்கங்கள் ஒலித்தபடியே இருந்தன. இடைவிடாமல் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறே அமைதியான முறையில் பேரணி நிறைவடைந்தது.

வழக்கமான பேரணிக்குரிய அடையாளங்களையும் தாண்டி, ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு, ஏகப்பட்ட பந்தோபஸ்து என பிரம்மாண்ட பேரணி சென்னையையே குலுங்க வைத்து விட்டது.

பொதுவாக இந்த குடியுரிமை சட்டத்துக்கு இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிப்பது அறிந்த விசயம்தான் ,ஆனால், இதில் இந்து பக்தர்களும் கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .அதிலும், இந்து பக்தர்கள் கலந்து கொண்டு இன்று போராட்டத்தை முன்னெடுத்து சென்றது மதச்சார்பின்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.தமிழ்நாடு எப்போதுமே வேறு என்று மோடி அரசுக்கு உரத்துக் கூறியது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top