குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு: திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி தொடங்கியது

சாதாரண இந்தியக் குடிமகனுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி தொடங்கியது. பொதுமக்களும் நிறையபேர் பன்கேர்ருக்கொண்டிருக்கிறார்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி பேரணி துவங்கி இருக்கிறது

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு  பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சைதாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக, குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்படுகிறது.

இந்த பேரணி இன்று காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கியது.  பேரணியில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின்,   மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ப.சிதம்பரம், கி.வீரமணி,  கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கனிமொழி, தயாநிதி மாறன்,  வேல்முருகன், உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி செல்கிறது.பேரணியில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம்  எழுப்பப்பட்டது.

பேரணியையொட்டி  போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

சென்னையில் தொடங்கிய திமுக பேரணியில், தோழமைக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் பங்கேற்று உள்ளன.

திமுக தலைமையில் நடைபெறும் பேரணியை முன்னிட்டு  எத்திராஜ் சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை, புதுப்பேட்டை சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் வந்துக்கொண்டே இருக்கிறார்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் பங்கேற்கலாம் என தெரிகிறது

இந்த பேரணிக்காக 2 கூடுதல் ஆணையர்கள் தலைமையில், சுமார் 5,000 போலீஸார் பேரணிக்காக பாதுகாப்பில் உள்ளனர். 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் 110 கேமராக்கள் மூலம் காவல்துறை பேரணியை கண்காணித்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top