மோடியும், அமித்ஷாவும் சேர்ந்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டார்கள் – ராகுல்காந்தி ட்விட்

மோடியும், அமித்ஷாவும் சேர்ந்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டார்கள் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தால், சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படும் என்று அந்த கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 

வழக்கம்போல இந்தச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, என்று பாஜக சொல்லிவருகிறது

இந்நிலையில் ராகுல்காந்தி டுவிட்டரில்  பதிவு ஒன்று செய்திருக்கிறார் அதில்  கூறியிருப்பதாவது:- 

“அன்புள்ள இளைஞர்களே! பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித் ஷாவும் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை அழித்து விட்டார்கள்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய சேதம், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாததால் ஏற்பட்டுள்ள உங்கள் கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. 

அதனால் தான் மோடியும், அமித் ஷாவும், வெறுப்பின் பின்புறம் மறைந்து கொண்டு, அன்புக்குரிய நம்முடைய தேசத்தைப் பிரிக்கிறார்கள்.   ஒவ்வொரு இந்தியரும் அன்போடு பதிலளிப்பதன் மூலம் மட்டுமே நாம் அவர்களை தோற்கடிக்க முடியும் என பதிவிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top