ஜமா அத்துல் உலமா சபை ஆர்ப்பாட்டம்: விருதுநகரில் 2000 பேர் மீது வழக்கு பதிவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுமதியின்றி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 2000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு  எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை மற்றும் செயலர் அப்துல்கரீம் பாக்கவி தலைமையில் நேற்று மாவட்ட அளவில் இஸ்லாமியர்கள் தரப்பில் கண்டன பொதுக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக, முறையான அனுமதி இல்லாமலும், பொதுமக்களின் பாதையை ஆக்கிரமித்து இடையூறு செய்தும், வழிமறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை முதல்வர் அப்துல்கரீம் பாகவி, செயலர் எம்.அப்துல்கரீம் பாக்கவி, தலைவர் நசீர் அகமத் பைஜி, பொருளாளர் ஹஸலுதீன் பைஜி, திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா மற்றும் சவ்கத்அலி, முகமது அமீன், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஜாபர் அலி, இந்திய யூனியன் முஸ்லீம் லாக் மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம்ஷா, தமுமுக மாவட்டத் தலைவர் முகமது இப்ராகிம், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலர் கண்மணிகாதர் மற்றும் 1,600 ஆண்கள், 400 பெண்கள் மீது விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top