குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க முயற்சி! அதிமுகவுக்கு மனசாட்சி இல்லை!! – ப.சிதம்பரம்

குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் இன்று அனைத்து ஜமாத் உலமாக்கள் சபை சார்பில் சின்னப்பா பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், திருநாவுக்கரசர் எம்.பி., கலந்து கொண்டனர். அப்போது ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-


பா.ஜ.க. அரசில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. முத்தலாக் தடை சட்டம், காஷ்மீரை பிரித்தது அதுதான்  பா.ஜ.க. அரசின் சாதனை. குடியுரிமை சட்ட போராட்டமானது இந்திய அரசியல் சட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போராட்டம். குடியுரிமை சட்டம் குறித்து அ.தி.மு.க.வுக்கு மனச்சாட்சி உறுத்தவில்லை. மனச்சாட்சி இருந்தால்தானே உறுத்தும். குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top