குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு; ஜனாதிபதி வருகை தரும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க பல்கலைக்கழக மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் திங்கட்கிழமை நடக்கிறது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்க உள்ளார்.

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவர் பரிஷையாதவ், செயலாளர் குறளன்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி விழாவை புறக்கணிக்க மாணவர்கள் செய்துள்ள இந்த முடிவால் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top