தமிழக லாரி ஓட்டுநர்கள் 900 பேர் உணவு, தண்ணீரின்றி ஜம்மு – காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கி தவிப்பு!

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் தமிழக லாரி ஓட்டுநர்கள் 900 பேர் பனிப்பொழிவில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சரக்குகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநர்கள் உணவு, தண்ணீரின்றி பனிப்பொழிவில் தவித்து வருகின்றனர். பனிப்பொழிவால் ஸ்ரீநகர், லடாக் பகுதிகளில் 450 லாரிகள் 12 நாட்களாக நிற்கின்றனர். நாமக்கல் ராசிபுரம் அருகே பாச்சலை சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். கடுங்குளிரால் உடல் உபாதை ஏற்படுவதாகவும், லாரியிலேயே 10 நாட்களுக்கு மேல்தங்கியிருப்பதாவும் தகவல்கள் தெரவிக்கின்றன. பனிப்பொழிவில் சிக்கியிருக்கும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டுநகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.  ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 0.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், ஜம்முவில் 9.6 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து முடங்கியது. சாலையில் படிந்துள்ள பனியை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநர்கள் பனிப்பொழிவால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top