குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : வீட்டில் கருப்பு கொடியேற்றிய இஸ்லாமிய பெண்கள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை கோட்டைமேடு பகுதியில் வீட்டில் கருப்பு கொடிகளை ஏற்றி இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் வலுப்பெற்று உள்ளன.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை  திரும்பப் பெறக் கோரி நெல்லை  மேலப்பாளையத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இன்று உலமாக்கள் சபை சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சுமார் 800 ஆட்டோ மற்றும் வேன்களும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடியுள்ளன.

கோவை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே  கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் இரவு முதலே வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். கோவை கோட்டைமேடு பகுதியில் வீட்டில் இஸ்லாமிய பெண்கள் கருப்பு கொடிகளை ஏற்றினர். இது குறித்து  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  கறுப்புக் கொடி கட்டுவதை தடுக்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான நிலை நீடித்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top