குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கொத்தாவை அதிர வைத்த மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை  கண்டித்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அப்போது அவர், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தார்.


மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்துவருகிறது. இந்த போராட்டங்கள் அறவழியில் நடைபெறுகிறது ,ஆனால் பல இடங்களில் பாஜக வை சேர்ந்தவர்கள் போலீசின் துணையோடு வன்முறை சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்  


மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, “தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பையும், குடியுரிமை சட்டத்தையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

மேற்குவங்காள மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்தபடி நேற்று அவரது தலைமையில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு அம்பேத்கர் சிலையில் இருந்து தொடங்கி ஜோரசாங்கோ தாகுர்பரியில் பேரணி முடிவடைந்தது.

7 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். பேரணியை தொடங்கிவைத்த மம்தா பானர்ஜி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான முழக்கங்களை போட்டார்.

அப்போது மம்தா பானர்ஜி, “மேற்கு வங்காளத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா  மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு ஆகியவற்றை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்த மாநிலத்தில் இருந்து ஒருவர் கூட வெளியேற்றப்படமாட்டார். அனைத்து மதம், சாதி, சமயங்களை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து வாழ்வதில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று உறுதிமொழியை வாசித்தார்.மேலும்,இந்த மசோதா நான் உயிருடன் இருக்கும் வரை நிறைவேற்றிட விடமாட்டேன் என்றார்

நாம் அனைவரும் இந்த தேசத்தின் குடிமக்கள். அதை நம்மிடம் இருந்து யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே போராட்டக்காரர்களுக்குள் வன்முறையாளர்கள் ஊடுருவி  பசுல்யாசுதாஹதா ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் டாம்லுக்-ஹால்டியா இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல மேலும் சில இடங்களிலும் ரெயில் போக்குவரத்து மறியல் காரணமாக தடைபட்டது. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top