மன்னிப்பு கேட்பதற்கு நான் ராகுல் சாவர்கர் அல்ல நான் ராகுல் காந்தி விளாசிய ராகுல்

மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் ராகுல் சாவர்கர் அல்ல ராகுல் காந்தி உண்மையை பேசுவதற்காக நான் ஒருநாளும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..

நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநில தேர்தல்  பிரசாரத்தின்போது நேற்று முன்தினம் இது ‘மோடி சொல்வது போல் மேக் இன் இந்தியா அல்ல ரேப் இன் இந்தியா’ என்று தெரிவித்தார்  இந்த  கருத்துக்கு  ஆளும்கட்சி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பையும் கண்டத்தையும்  தெரிவித்தனர்.

பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியிருப்பதாக இதற்காக  மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்

இந்நிலையில், உண்மையை பேசுவதற்காக நான் ஒருநாளும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார். 

விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை போன்றவற்றை கண்டித்து “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற பெயரில் டெல்லி  ராம்லீலா திடலில் மிக பிரமாண்டமான எதிர்ப்பு பேரணியை காங்கிரஸ் கட்சி இன்று நடத்தியது. 

இந்த பேரணியில் பேசிய ராகுல் காந்தி, ‘எனது பெயர் ராகுல் காந்தி ராகுல் சாவர்க்கர் அல்ல. என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார் [சாவர்கர் பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டு தான் சிறைக்கு செல்லாமல் தப்பித்த வரலாற்றை நினைவு கூறுவது போல்] பாஜக வை கடுமையாக விமர்சித்தார்.

பொருளாதாரத்தை  அழித்துக்கொண்டிருக்கும் மோடி தன்னை தேசபக்தர் என கூறிக்கொள்கிறார்.  இந்திய பொருளாதாரத்தை அழித்துக் கொண்டிருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தான்  மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மையை பேசுவதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன். என்னைப்போலவே எந்த  காங்கிரஸ் கட்சியினரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’, என்று தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top