நாகை திருவள்ளுவன் மீது புனையப்படும் பொய் வழக்குகள்; காவல்துறை இயக்குநரிடம் மனு

கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டியும், அம்மக்களோடு அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 பேர்கள் காலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

இதில் எல்லோருக்கும் பிணை வழங்கப்பட்டு விட்டது ஆனால், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு ஒவ்வொரு வழக்குகளிலும் பிணை கொடுக்கப்பட்டதும் மேலும், ஒரு வழக்கை போடுவது என்று போலீஸ் கடைப்பிடித்து வருகிறது. ஆகையால், அவர் பிணையில் வெளியே வரமுடியவில்லை.அவரை எப்படியாவது சிறை உள்ளேயே வைக்கவேண்டும் என பொய் வழக்கை போடுவதை வாடிக்கையாக்கி விட்டது போலீஸ், இரண்டு வழக்குகளில் நீதிமன்றம் ரிமாண்ட் செய்ய மறுத்தும் காவல்துறையினரை திட்டியும் விட்டது,ஆனாலும் பொய்வழக்கு போடுவது குறைந்தபாடில்லை

இந்நிலையில், நீதி கேட்டு போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது புனையபட்டுள்ள பொய் வழக்குகளை நீக்கக்கோரி, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன் தலைமையில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநரை (DGP) நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி, தோழர் தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.செரிப், விடுதலை தமிழ்ப்புலிகள் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் குமரன், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் மனு அளிக்க நேரில் சென்றனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top