மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 33 வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது.இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,900 கன அடியாக உள்ளது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. 

மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top