உள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி

திமுக உள்ளாட்சித் தேர்தல் விசயமாக சில கேள்வி எழுப்பி  தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு புதிய மாவட்டங்கள் பிரித்தது குறித்து  சரமாரியாக கேள்வி எழுப்பியது.

ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. நகர உள்ளாட்சிப் பகுதிகளுக்குப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வார்டுகள் மறுவரையறை முடிவடையாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் மாவட்ட பிரிப்புகள் குறித்து உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும் திமுக தரப்பில் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ, 5 மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க முடியும். ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என வாதிட்டார்.

இதனை நிராகரித்த திமுக வழக்கறிஞர், 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்தால் குழப்பம் ஏற்படும் என சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முடியுமா? என பிற்பகல் 2 மணிக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top