‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!

“நான் வெங்காயமும் பூண்டும் உணவில் சேர்த்துக் கொள்ளாத குடும்பத்தில் இருந்து வந்தவள். எனவே அது பற்றி எனக்கு கவலையில்லை” என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது

நாட்டில் வெங்காய விலை கடுமையான ஏற்றத்தை கண்டிருக்கிறது சில வியாபாரிகள் குறிப்பாக ஆளும் கட்சிக்கு வேண்டிய வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்துக்கொண்டு இரட்டிப்பு விலையில் கள்ள மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறார்கள்

இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில் “நான் அந்த அளவுக்கு நிறைய பூண்டு, வெங்காயத்தை சாப்பிட மாட்டேன்.அதனால் கவலையில்லை. வெங்காயத்தை சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான்” என்றார். வெங்காய விலையால் நாட்டு மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் நிர்மலாவின் இந்த கருத்து எதிர்க்கட்சியினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.

வெங்காய விலை ஏற்றம் குறித்து சிறிதும் கவலைப்படாமல் உயர்சாதி மனநிலையில் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு வெங்காயமும் பூண்டும் சாப்பிடுபவர்கள் கீழ் சாதி என பொருள் கொள்ளும்படி இருக்கிறது.ஆகையால் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரை கண்டித்து சமூக ஆர்வலர்கள் முகநூலில் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள் “பிரெஞ்சு புரட்சிக்கு முன்னர் பிரெஞ்சு அரசி மரியா அன்டோனைட் என்ற அகங்காரி மக்கள் பசியால் வாடி முறையிட்ட போது அவர்களிடம் ரொட்டி இல்லை என்றால் கேக்கு  சாப்பிடுங்கள்” என்று எள்ளிய நகையாடிய காட்சி நினைவிற்கு வருகிறது என ஒருவர் பதிவுயிட்டிருக்கிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top