உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி அளிக்கப்படுகிறது. என முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியிருந்தார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்கான இந்தி மொழி பயிற்சியை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து அதற்காக ஆறு லட்ச ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கின்றார் என்றும், அந்த ஒரு வருடப் பயிற்சியும் சென்னையில் இயங்கி வரும் இந்தி பிரச்சார சபா மூலமாக நடத்தப்பட்டு அவர்களாலேயே சான்றிதழும் வழங்கப் படுகிறது என்றும் குற்றம்சாற்றி, கடும் கண்டன அறிக்கை வெளியிட்து இருந்தார் . முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்.

அதில்,  “மொழிப்பிரச்சினையில் தமிழகம் ஒரு கந்தக பூமி என்பதை மறந்து தமிழக மக்களின் உணர்வுகளோடு மீண்டும் சீண்டி விளையாடத் துவங்கியிருக்கும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்” என கூறி இருந்தார்.

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளதற்கு திமுக உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள்  கடும் எதிர்ப்பை தெரிவித்தும் இருந்தன

இந்த குற்றசாட்டு மக்களிடையே,தமிழ் அறிஞர்களிடையே  பெரும் வியப்பை ஏற்படுத்தியது.மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் போல  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று தமிழ் அறிஞர்கள் அறிக்கை வெளியிட்ட பிறகு

முன்னால் அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன குற்றச்சாட்டை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஏற்றுக்கொண்டு விளக்கமளித்துள்ளார்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உள்பட பல மொழிகள் கற்று தரப்படுகிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறி உள்ளார். மேலும், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது

, ”உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்தவே இந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட பல்வேறு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. இரண்டு மொழிகளையும் தரமான ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.

2014-ம் ஆண்டில் இருந்தே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிரெஞ்சு மற்றும் இந்தி கற்பிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்ததன் அடிப்படையில், உலக மொழியான பிரெஞ்சு, இந்திய மொழியான இந்தி ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுக் கற்பிக்கப்பட்டது. தமிழை விட அதிகம் பேசப்படும் மொழிகளாக இந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு மொழிகளில் இருந்து இது தேர்ந்தெடுக்கபட்டது.

இடையில் பிறமொழிப் பயிற்சி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கற்பிக்கப்படுகிறது. இந்தி பிரச்சார சபாவில் இருந்து நேரடியாக யாரும் வந்து, இந்தியைக் கற்பிக்கவில்லை. அதேபோல இந்தியைக் கட்டாயப் பாடமாக்கவில்லை. விருப்பப் பாடமாகவே உள்ளது. இந்தி வேண்டும் என்று மாணவர்களேதான் தேர்ந்தெடுத்தனர். விருப்பப் பாட அடிப்படையில்தான் இந்தி கற்பிக்கப்படுகிறது.

இன்னொரு மொழியைக் கற்கும் போதுதான் நம் மொழியின் சிந்தனை வளரும். மாணவர்களின் திறனை வளர்த்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க விரும்புகிறோம். இதற்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேர்முக வளாகத் தேர்வை நடத்தி வருகிறோம்” என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.

அமைச்சர் பாண்டியராஜனின் இந்த பேச்சு தமிழ் அறிஞர்களிடையே பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹிந்தி பிரச்சார சபாவில் தமிழ் சொல்லிக் கொடுபார்களா?உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் என்பது தமிழ் குறித்து ஆய்வு செய்வது மட்டுமே அதிமுக எடப்பாடி அரசு பாஜக கட்சியின் கொள்கையை தமிழகத்தில் புகுத்த பார்கிறார்கள் என்று அதிமுக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top