17 பேரின் மரணத்திற்கு நீதிகேட்டும், போராடிய நாகை திருவள்ளுவனை விடுதலை செய்ய வேண்டியும் ஆர்பாட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டியும், அம்மக்களோடு அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 தோழர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

இந்த கைதை கண்டித்து இன்று (03-12-19) காலை கோவை திருவள்ளுவர் பேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஜனநாயக அமைப்புகள், கட்சிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று கைதாகினர்.

,

1) திராவிடர் தமிழர் கட்சி
2) ஆதித்தமிழர் கட்சி
3) தீண்டாமை ஒழிப்பு முன்னணி
4) திராவிட முன்னேற்ற கழகம்
5) SDPI
6) மே 17 இயக்கம்
7) சிபிஐ எம்எல்
8)தமிழ் சிறுத்தைகள் கட்சி
9) மக்கள் அதிகாரம்
10) புரட்சிகர இளைஞர் முன்னணி
11) தமிழர் விடியல் கட்சி
12) இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
13) 8 மணி நேர வேலைக்கான தொழிலாளர் இயக்கம்
14) தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
15) பகுஜன் சமாஜ் கட்சி
16) வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா
17) நாம் தமிழர் கட்சி –
18) நீலம் பண்பாட்டு மையம்

போன்ற அமைப்புகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top