எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கிரீமிலேயர் முறை கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு

எஸ்.சி.-எஸ்.டி. இடஒதுக் கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு அளித்த உத்தரவுக்கு எதிரான மனுவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வலியுறுத்தியது.



இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, எஸ்.சி.-எஸ்.டி. ஒதுக்கீட்டில் இருந்து கிரீமிலேயர் விலக்கு அளிக்கும் பிரச்சினையை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றலாமா? அல்லது 2 வாரங்களுக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அரசு தரப்பில், இந்த பிரச்சினையை மறுஆய்வு செய்ய 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.

அதேசமயம் இதுதொடர்பாக சாம்தா அண்டோலன் சமிதி மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஓ.பி.சுக்லா ஆகியோர் தரப்பில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் ஒரு மனுவில், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினரில் கிரீமிலேயரை அடையாளம் காண்பதற்காக ஒரு பாரபட்சமற்ற, நியாயமான தேர்வை நடத்தலாம். இதன்மூலம் கிரீமிலேயர் அல்லாதவர்களை தனியாக பிரிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு சலுகையைப் பெற வருமான உச்ச வரம்பு (கிரீமிலேயர்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கிரீமிலேயர் முறை பொருந்தாது.

இந்நிலையில், ஜர்னைல் சிங் வழக்கில் , எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் கிரீமிலேயர் முறை பொருந்தும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணு கோபால், “இந்திரா சாவ்னே (மண்டல்) வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு கடந்த 2008-ல் தீர்ப்பு வழங்கியது.

அதில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கிரீமிலேயர் முறையை அமல்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் ஜர்னைல் சிங் வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். கிரீமிலேயர் முறையிலிருந்து எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விலக்கு அளிக்க வேண்டும். எனவே, இந்த மனுவை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்றார். இதையடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top