சிம்புவின் புதுபட தலைப்பு!

simbuசிம்பு தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இருவரும் 2006–ல் ரிலீசான வல்லவன் படத்தில் இணைந்து நடித்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரையும் மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்கிறார் பாண்டிராஜ். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு, கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என பெயர் வைக்க பரிசீலித்தனர். இது வாரணம் ஆயிரம் படத்தில் வரும் பாடலில் இடம் பெறும் பிரபலமான வரியாகும்.

இந்த தலைப்பை ஏற்கனவே வேறு ஒருவர் பதிவு செய்துள்ளதால் தற்போது ‘காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்’ என்ற பெயரை சூட்ட யோசிக்கிறார்களாம்.

தற்போது கௌதம் மேனன் அஜீத் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்ததும் சிம்பு பட வேலைகள் துவங்குகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top