இந்தியா எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்;கோத்தபய ராஜபக்சேவின் திமிர் பேட்டி! கண்டிப்பாரா மோடி?

2009ல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றவாளியாக நிற்கும் கோத்தபய ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், வரும் 29 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார்.

தற்போதைய புவிசார் அரசியலில் இந்திய பெருங்கடல் முக்கிய பங்காற்றி வருகிறது. கிழக்கில் இருந்து மேற்கு நாடுகளுக்கு செல்லும் அனைத்து கடல் மார்க்கமும் இலங்கைக்கு அருகில் செல்கிறது. இந்த கடல் மார்க்கம் விடுதலை புலிகள் இருந்தவரை இந்தியாவின் வணிகத்திற்கு எந்தவிதமான பிரச்சனையும் இன்றி இருந்தது. கடல் மார்க்க வணிகத்திற்கு மற்ற நாடுகள் குறிப்பாக சீனா,அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தாவண்ணம் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது இந்தியப் பெருங்கடல்.

இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த பெருங்கடலை மோசமான வெளியுறவு கொள்கையினால் இந்தியா, புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் பன்னெடுங்காலமாக இந்தியாவின் சொத்தாக இருந்த இந்தியப்பெருங்கடலை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டது,இப்போது இந்தியப்பெருங்கடல் இலங்கையின் மூலமாக  சீனாவின் ஆதிக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், இம்மாதம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். இந்தியாவின் அண்டை நாட்டு அதிபர் இவர் வெற்றிப் பெற்றதும் இந்தியா வெளியுறவு கொள்கை சார்ந்து பேச அழைப்பு விடுத்திருக்கிற சூழலில் ‘இந்தியா பயப்பட வேண்டாம்’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே

இது இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு விழுந்திருக்கும் சாட்டை அடி.இதை பாஜக அரசு புரிந்துகொண்டதாக தெரியவில்லை   

மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளியுறவு கொள்கையில் காங்கிரஸ் எந்த நிலைப்பாட்டை எடுத்ததோ அதே நிலைப்பாட்டை எடுப்பது,குறிப்பாக தமிழர் விரோத நிலைப்பாட்டை எடுப்பது, மேலும், இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது கோத்தபய ராஜபக்சே கொடுத்திருக்கும் பேட்டி மூலம் அறிய முடியும்

கோத்தபய ராஜபக்சே ஒரு இந்திய மின்னணு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது

“நாங்கள் அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். மற்ற எந்த நாடுகளின் நலனுக்கும் எதிராக அமையும் எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம். இந்தியா கவலைப்படுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். எனவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம்.” என இந்தியா தேவையில்லாமல் எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்கிறார்

29 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிற கோத்தபாய ராஜபக்சே விடம் இது குறித்து மோடி  கண்டித்து பேசுவாரா?


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top