பஞ்சாபில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் முன்னணி!

aam aathmiபஞ்சாபில் மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையில் அதிசய தக்க வகையில் ஆம் ஆத்மி கட்சி பரீத்கோட், பதேகார் சாதிப், பாட்டியாலா மற்றும் சாங்கரூர் ஆகிய 4 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

அதே நேரத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சி பெரோஸ்ரா, அனந்தபூர் சாகிப், கதார் சாதிப், பதிண்டா ஆகிய 4 தொகுதிகளில் முன்னையில் உள்ளது.

அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதா குர்தாஸ்பூர், ஹோசியர் பூர் ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலை வக்கிறது. அமார்தசரஸ், ஜலந்தர் மற்றும் லூதியானா ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

பதிண்டா தொகுதியில் கிரோன்மணி அகாலிதள வேட்பாளர் ஹர்சிமர்த் கவுர் பாதல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மன்பிரித் சிங் பாதலை விட 42 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். இவர் பஞ்சாப் முதல் – மந்திரி பிரகாஷ் சிங் பாதலின் மருமகள் ஆவார். எதிர்த்து போட்டியிடும் மன்பிரித்சிங் பாதல் உறவினர் ஆவார்.

பட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் தரம் வீரா காந்திரி காங்கிரசை சேர்ந்த மத்திய மந்திரி பிரனீத் கவிரை விட 554 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

அமிர்தசரஸ் தொகுதியில் பா.ஜனதாவின் அருண் ஜெட்லி 1846 ஓட்டுகள் குறைவாக பெற்ற பின் தங்கியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல் – மந்திரி அம்கீந்தர் சிங் முன்னணியில் உள்ளார்.

குர்தாஸ்பூரில் பா.ஜனதா வேட்பாளர் நடிகர் வினோத் கன்னா முன்னணியில் உள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப்சிங் பஜ்வாவை விட 7327 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top