50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது

இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து நடத்தும் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர். இதில் அமிதாப்பச்சனுக்கு “தாதா சாகேப் பால்கே” விருதும், ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’ என்ற விருதும் வழங்கப்பட உள்ளது.

9 நாட்கள் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் சர்வதேசம், இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் 3 இடங்களில் திரையிடப்படுகின்றன. ஈரான், கொரியா, பிரான்ஸ் உட்பட 76 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களும், இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சேர்ந்த 41 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

IFFI 2019.ல்தொடக்கப் படமாக செர்பியன் திரைப்பட இயக்குனர்  கோரன் பாஸ்கல்ஜெவிக்ஸ்  திரைப்படமான “Despite the Fog”, திரையிடப்பட்டது. இது இன்றைய உலகளாவிய பிரச்சனையாக இருக்கும் புலம் பெயர்தல் பற்றிய படம்.ஒரு  அகதியாக-அநாதை வாழ்கை வாழும் சின்ன பையன்  -அலி பற்றி பேசுகிறது, இத்தாலிய தம்பதியினரால் தத்து எடுக்கப்பட்ட போதிலும் வெளிநாட்டிலிருந்து வந்த பையன் என்கிற மனநிலையோடு சமூகம் அவர்களை அணுகுவதை பற்றி பேசுகிறது

ஈரானிய திரைப்பட இயக்குனர் ,தயாரிப்பாளர் மொஹ்சென் மக்மல்பாஃப் இயக்கியுள்ள ‘ Marghe and Her Mother’ என்கிற திரைப்படம் திரைப்பட விழாவின் நிறைவு படமாக திரையிட இருக்கிறது இந்த  படம் ஆறு வயது குழந்தையின் வாழ்க்கையைப் பற்றியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top