இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயார் – அமெரிக்க அரசு

இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு இடையேதான் நேரடிப்போட்டி நிலவியது.

ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் மறைமுக ஆதரவு இருந்தது. இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சீனாவின் நேரடி ஆதரவு இருந்தது.இலங்கையில் சீனாவின் வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது  

இந்நிலையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அமெரிக்க அரசாங்கம் முன் வந்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க அரசாங்க செயலாளர் மைக் பாம்பியோ கூறியதாவது;-

“இலங்கை மக்களுக்கும், புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவுக்கும் அமெரிக்க அரசாங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளது.

இலங்கையில் பாதுகாப்பு துறையில் சீர்திருத்தம், நம்பகத்தன்மை, மனித உரிமை மற்றும் மீண்டும் நிகழக்கூடாத வன்முறை ஆகியவற்றை கோத்தபய ராஜபக்சே கருத்தில் கொள்வார் என நாங்கள் நம்புகிறோம்.

இலங்கை தேர்தல் மூலமாக இலங்கையில் ஜனநாயகத்தின் வலிமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

தமிழர்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்த ராணுவ தளபதியாக செயல்பட்டவர் கோத்தபய ராஜபக்சே, தற்போது அந்நாட்டின் 7வது ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top