அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை அடித்த தீட்சிதரை கைது செய்ய வாதாடிய பெண்மணியின் வீடியோ! வைரலாகிறது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை [நர்சை] தாக்கி,ஆபாசமாக திட்டிய  தீட்சிதர் தர்சன் மீது வழக்கு பதிவு செய்ய கடுமையாக வாதாடிய பெண்மணியின் வீடியோ முகநூலில் பரவலாக வைரலாகிக்கொண்டிருக்கிறது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி இவரது மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார்.


இவர் தனது மகன் பிறந்த நாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகர் கோவிலுக்கு சென்றார். தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சிதர் தர்‌ஷனிடம் கூறினார். ஆனால் நர்சு லதாவிடம் பெயர், ராசி எதுவும் கேட்காமல் தீட்சிதர் அர்ச்சனை செய்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீட்சிதர் தர்‌ஷன் நர்சு லதாவை ஆபாசமாக திட்டி,பெண் என்றும் பாராமல்  கன்னத்தில் அறைந்தார்.

காயம் அடைந்த லதா அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சிதம்பரம் டவுன் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.

தர்சன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான தீட்சிதரை போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை

தீட்சிதரை கைது செய்யவேண்டும் என ஊர் பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திடமும் போலீசிடமும் வாக்குவாதம் செய்தனர்.அதில் ஒரு பெண் கேட்கும் கேள்விகளுக்கு நிர்வாகம் பதில் சொல்லமுடியாமல் திணறுகிறது

வீடியோ இணைப்பு https://www.facebook.com/tamilsnow/videos/970915053272360/


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top