வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | சென்னையில் வ.உ.சி அத்தியாயம் 1 -ஓவியர் டிராட்ஸ்கி மருது

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல் –‘சென்னையில் வ உ சி’ என்கிற இந்த காட்சி உரையாடல் வந்தாரை வாழவைத்த சென்னை வஉசி க்கு ஏன் வறுமையை மட்டும் பரிசளித்தது என்கிற வரலாற்றை அலச இருக்கிறது.

வ.உசி சென்னையில் வாழ்ந்த இடங்களை தேடிக் கண்டடைந்து பதிவு செய்ய இருக்கிறோம். முதல் அத்தியாயமாக ஓவியர் ட்ராட்ஸ்கி மருது  அவர்கள் சென்னையில் Beach Railway Station, 5 ம் gate அருகே உள்ள வ.உ.சி. சிலை பற்றி அறியாத தகவலை பகிர்ந்து கொள்கிறார்

டிராட்ஸ்கி மருது [Trotsky Marudu] ஓவியரும், இயங்குபடக் கலைஞர் ஆவார். கோட்டோவியங்கள், கணிப்பொறி வரைகலையிலும் முன்னோடியாகக் கருதப்படுபவர்.

உலகக் காண்பியல் தளத்தில் தமிழ் அடையாளத்தை முதன்மையாகப் பதிவு செய்தவர்களில் ஒருவராகவும், வெகுமக்கள் ஊடகங்களில் செயல்பட்டு நவீன ஓவியத்தைக் கொண்டுசென்றவராகவும், காண்பியல் கலை வெளிப்பாட்டிற்குக் கணினியைப் பயன்படுத்தியதில் முன்னோடியானவராகவும், இளங்கலைஞர்களை இயங்குபடத் துறையில் ஊக்கப்படுத்தி வளர்த்தவராகவும் கருதப்படுகிறவர் ஓவியர் மருது அவர்கள் .

சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் ஓவியர் மருது அவர்கள் படித்தபோது அந்நாளில் கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த சிற்பி தனபாலுடன் அறிமுகம் ஏற்பட்டு,. பின்னாட்களில் அவர் மருதுவுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். கல்லூரியின் மூத்த மாணவரான ஓவியர்  ஆதிமூலத்துடன் சேர்ந்து வெகுமக்கள் இதழ்களில் சமகால ஓவியங்களைப் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர் ஓவியர் மருது  அவர்கள்

இன்று இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ. உ. சிதம்பரனார். அவரின்  சிலை சென்னையில் எடுக்கப்பட்ட விதத்தையும் சிலையின் உயரிய கலைத்தன்மையையும் அதை உருவாக்குவதில் ஓவியர்களின் அர்பணிப்பையும்  

உரையாடலை  காட்சி தொடரில் வ.உ.சி யின்  நினைவு நாளில் 18-11-2019  அன்று நம்மோடு பகிர்ந்து கொண்டார்  

தமிழ்ஸ்நவ் 

வீடியோ இணைப்பு;

  https://www.youtube.com/watch?v=GSDcNCz85K8&feature=youtu.be

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top